சினிமா செய்திகள்

காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா?- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி + "||" + Does an actress’ demand/desirability really go down after marriage?

காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா?- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி

காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா?- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி
திருமணத்துக்குப் பின் காதல் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களிடம் ஏன் கேட்பதில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொந்தளித்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத்.
பெங்களூரு

கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் வெளியான 'யு டர்ன்' படத்தின் மூலம் பிரபலமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். தமிழில் 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை' படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் நடிகைகள் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தன்னைப் பின் தொடர்பவர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளார்.
அதில் ஷரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:

"ஒரு நடிகையின் தேவை/ஆசை திருமணத்துக்குப் பின் காணாமல் போய்விட வேண்டுமா? நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல; ஒரு சாதாரண திரைப்பட நடிகை மட்டுமே. இதற்கான பதிலை நீங்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நண்பர்களே. தயவுசெய்து கலந்துரையாடுங்கள்.

ஒரு நடிகைக்கு விரைவில் திருமணமாக உள்ளது. அவர் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பாரா என்று சினிமாவைச் சார்ந்த ஒரு நபராலேயே கேட்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு கேள்வியை மிகவும் அலட்சியமாகவும் தயக்கமில்லாமலும் கேட்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

இது என்னைக் கோபம் கொள்ளச் செய்து என்னைச் சிந்திக்க வைத்தது. இதுகுறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க விரும்புகிறேன். திருமணமான ஒரு நடிகர் பெண்களுடன் ரொமான்ஸ் செய்வதில்லையா? இதுபோன்ற கேள்விகளை ஏன் அவர்களிடம் கேட்பதில்லை? இங்கே சில விஷயங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் பதில்களுக்கு நன்றி என்று ஷரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது
விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
2. இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட்
பிரபலங்கள் மனித பிராண்டுகளாக என்ற ஆய்வில் இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட் என தெரிய வந்து உள்ளது.
3. வைரலாகும் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.
4. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை! விஜய் பேசியது என்ன?
நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
5. நானும் தலைவர்தான்.. நானும் ஜெயிலுக்கு போறேன்.., ஜெயிலுக்கு போறேன்...- நடிகை கங்கனா
நானும் தலைவர்தான் நானும் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... என நடிகை கங்கனா ரனாவத் கூறி உள்ளார்.