சினிமா செய்திகள்

நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்ற ரஜினிகாந்த்! + "||" + Rajinikanth to bear the cost of Ponnambalam's kidney transplant surgery

நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்ற ரஜினிகாந்த்!

நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்ற ரஜினிகாந்த்!
நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டதாக பொன்னம்பலத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, நாட்டாமை, மாநகர காவல், உள்ளத்தை அள்ளித்தா, மாயி, சாமி, செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், செந்தூரப்பாண்டி, முத்து, இந்தியன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.


பொன்னம்பலத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறும் இருந்தது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோர் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு ரஜினிகாந்த் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் தரப்பிலிருந்து கூறியதாவது:-

எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.