அஜித் பட நடிகைக்கு கொரோனா
நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
பிரபல சின்னத்திரை நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகை ராச்சல் ஒயிட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இவர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள உங்க்லி படத்திலும் நடித்து இருக்கிறார். வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது மீ டூ புகார் சொல்லி பரபரப்பாக பேசப்பட்டார். ராச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story