சினிமா செய்திகள்

நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன் + "||" + I adore those who prayed for our well-being - Actor Amitabh Bachchan

நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்

நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமிதாப்பச்சனையும் அபிஷேக்பச்சனையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். அமிதாப்பச்சனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


ஐஸ்வர்யா ராயும் ஆரத்யாவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமிதாப்பச்சனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் குணமடையை வாழ்த்து தெரிவித்து அரசியல் தலைவர்களும் நடிகர் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

தமது குடும்பத்தினர் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் டுவிட்டரில் அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

“நானும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆரத்யா ஆகியோரும் குணமடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்தையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் எங்கள் மீது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். எனது கைகளை கூப்பி அனைவரையும் வணங்குகிறேன். எல்லோருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.