சினிமா செய்திகள்

ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் கசிந்த படம் + "||" + movie leaked online before release

ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் கசிந்த படம்

ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் கசிந்த படம்
மலையாள பட உலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ்
மலையாள பட உலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ். இவர், ‘மாரி-2’ படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இதையடுத்து, ‘கிலோ மீட்டர் அண்ட் கிலோ மீட்டர்’ என்ற மலையாள படத்தை தயாரித்தார். இதில், அவர் நடித்தும் இருக்கிறார்.


படம், கடந்த மார்ச் மாதமே திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் ‘ஆன் லைனில்’ கசிந்துள்ளன. இது, டொவினோ தாமசுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே காட்சிகள் வெளியில் கசிந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.