சினிமா செய்திகள்

அறிமுக படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்! + "||" + 5 heroines paired with Vikram's nephew

அறிமுக படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!

அறிமுக படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
விக்ரம் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
விக்ரம் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய்ஸ்ரீ ஜி டைரக்டு செய்கிறார்.


அர்ஜூமன் நடிக்கும் முதல் படத்தில் அவருடன் ஜோடி சேரும் கதாநாயகிகளின் பெயர்கள் வருமாறு:-

ஐஸ்வர்யா தத்தா, அரித்ரா நாயர், ஆராதயா, சான்ட்ரியா, சாந்தினி.

‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி, ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் “யார் இவள்” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து இருக்கிறார்கள்.

விக்ரம் மகன் துருவ், மருமகன் அர்ஜூமன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரும் கதாநாயகனாக நடித்து வருகிறார். “மகன், மருமகன் ஆகிய இருவருக்கும் சரியான போட்டி, விக்ரம்” என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.