கொரோனா ஊரடங்கில் ஆர்யா 100 கி.மீட்டர் சைக்கிள் பயணம்

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஆர்யா சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார். ஏற்கனவே தேசிய மற்றும் சர்வதேச சைக்கிள் பந்தய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புறநகர் பகுதிக்கு அடிக்கடி சைக்கிளில் சவாரி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் சந்தானம், கதாநாயகனாக ஒப்பந்தம் ஆனதும் ஆர்யாவுடன் சைக்கிள் சவாரி சென்றுதான் உடல் எடையை குறைத்தார். கொரோனா ஊரடங்கிலும் சைக்கிள் சவாரியை ஆர்யா விடவில்லை. தினமும் நண்பர்களுடன் அதிகாலையில் சைக்கிளில் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் 100 கிலோ மீட்டர் சைக்கிள் சவாரி செய்து சாதனை நிகழ்த்தியதாக டுவிட்டரில் ஆர்யா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 80 கிலோ மீட்டர் வரை புறநகர் பகுதிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். ஆர்யா அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

Related Tags :
Next Story