சினிமா செய்திகள்

பட அதிபர் மீது பாலியல் புகார் + "||" + complaint against the film director

பட அதிபர் மீது பாலியல் புகார்

பட அதிபர் மீது பாலியல் புகார்
சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் ஏற்கனவே குற்றம் சாட்டினர்.
சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் ஏற்கனவே குற்றம் சாட்டினர். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். இந்த நிலையில் பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆல்வின் அந்தோணி மீது 22 வயது மாடல் அழகி ஒருவர் தற்போது பாலியல் புகார் கூறியுள்ளார். ஆல்வின் அந்தோணி மலையாளத்தில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார். ஜெயராம் நடித்த தெய்வம் கைதொழாம் கே.குமார் அகனம், பிருதிவிராஜ் நடித்த அமர் அக்பர் அந்தோனி, நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ஓம் சாந்தி ஓசானா உள்பட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.


இவர் மீது மாடல் அழகி போலீசில் அளித்துள்ள புகாரில், “ஆல்வின் அந்தோணியிடம் சினிமா வாய்ப்பு கேட்டு சென்றேன். அவர் நடிக்க வாய்ப்பு தருவதாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் மாதம்வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அனீஸ் தெரிவித்தார். தயாரிப்பாளர் ஆல்வின் தலைமறைவாகி விட்டார்.