சினிமா செய்திகள்

முகக்கவசம் அணிந்து கார் ஓட்டும் ரஜினி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் + "||" + Rajini driving a car wearing a mask Photo goes viral on social media

முகக்கவசம் அணிந்து கார் ஓட்டும் ரஜினி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

முகக்கவசம் அணிந்து கார் ஓட்டும் ரஜினி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
ரஜினியின் சமீபத்திய புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.
சென்னை

தா்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட நடிக்கிறார்கள். 

வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லம்போர்கினி சொகுசு காரை தானே ஓட்டி செல்லும் ரஜினிகாந்த் படம் சமூகவலைத்தளங்களில் வரலாகி உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கார் ஓட்டுநர் யாரையும் அனுமதிக்காமல் முகக்கவசம் அணிந்து சீட் பெல்ட் போட்டுக்கொண்டு,  கொரோனா பாதுகாப்பு முறைகளுடன் ரஜினி காரை ஓட்டும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த' படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
2. விமர்சனம் செய்ததற்கு வருந்துகிறேன்; ரஜினிகாந்த் இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் -சீமான்
நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
3. நண்பர் என்ற முறையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமல்
நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. கட்சி தொடங்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் கூறிய வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டுகள்; திருப்பூரில் தயாரிப்பு மும்முரம்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் கூறிய வாசகங்கள் இடம் பெற்ற டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு தயாரிப்பு திருப்பூரில் மும்முரம்மாக நடந்து வருகிறது.
5. ரஜினிகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ராஜ கண்ணப்பன் பேட்டி
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணை செயலாளர் ராஜகண்ணப்பன் கூறினார்.