என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது


என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
x
தினத்தந்தி 23 July 2020 4:15 AM IST (Updated: 23 July 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி விகாஸ் துபே கான்பூரில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசாரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


உத்தரபிரதேசத்தை கலக்கிய பிரபல ரவுடி விகாஸ் துபே கான்பூரில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசாரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனின் பழம்பெரும் மஹாகால பைரவர் கோவிலில் சாமி கும்பிட வந்தபோது போலீசாரிடம் சிக்கினான். அவனை உத்தரபிரதேச போலீசார் வேனில் அழைத்துகொண்டு கான்பூருக்கு கிளம்பினர். வழியில் வேன் நிலை தடுமாறி கவிழவும் விகாஸ் துபே போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு விட்டு தப்ப முயன்றான். இதையடுத்து விகாஸ் துபேயை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அவனது கூட்டாளிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் விகாஸ் துபேயின் வாழ்க்கை ‘விகாஸ் துபே கான்பூர் வாலாய’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாகிறது. இந்த படத்தை ஆதித்ய காஷ்யாப், அவ்தேஷ் திவாரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். மிருதுல், கபில், சுபோத் பாண்டே ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது

Next Story