சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமி படத்துக்கு தங்க கடத்தல் பணம் முதலீடா? பட அதிபர் விளக்கம் + "||" + Is gold smuggling money an investment for Aishwarya Lakshmi?

ஐஸ்வர்யா லட்சுமி படத்துக்கு தங்க கடத்தல் பணம் முதலீடா? பட அதிபர் விளக்கம்

ஐஸ்வர்யா லட்சுமி படத்துக்கு தங்க கடத்தல் பணம் முதலீடா? பட அதிபர் விளக்கம்
ஐஸ்வர்யா லட்சுமி படத்துக்கு தங்க கடத்தல் பணம் முதலீடா? பட அதிபர் விளக்கம்
தங்க கடத்தல் விவகாரம் கேரளாவில் புயலை கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தங்க கடத்தலில் தொடர்புடையை ஒருவரின் பணத்தை வைத்து மலையாளத்தில் உருவான மாயநதி படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடித்த மாயநதி படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்து இருந்தார்.


தமிழில் உதயநிதி நடித்த நிமிர் படத்தையும் தயாரித்துள்ளார். மாயநதி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் விஷாலுடன் ஆக்‌ஷன் படத்தில் நடித்து இருந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார். குற்றச்சாட்டை மறுத்த தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா தனது முகநூல் பக்கத்தில் “நான் தயாரித்த மாயநதி படத்துக்கு பிரச்சினைக்குரிய நபர் ஒருவர் நிதி உதவி செய்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. எந்த ஆதாரத்தில் இந்த போலியான தகவல் பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. மாயநதி படம் எனது வங்கி கணக்கு பணத்தில் இருந்து வரிகள் அனைத்தும் செலுத்தி தயாரிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.