45-வது பிறந்த நாள் சூர்யாவை வாழ்த்திய நடிகர், நடிகைகள்


45-வது பிறந்த நாள் சூர்யாவை வாழ்த்திய நடிகர், நடிகைகள்
x
தினத்தந்தி 24 July 2020 4:30 AM IST (Updated: 24 July 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

45-வது பிறந்த நாள் சூர்யாவை வாழ்த்திய நடிகர், நடிகைகள்

நடிகர் சூர்யா 1997-ல் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, ஆறு, அயன், ஆதவன், 7-ம் அறிவு, சிங்கம், காப்பான் என்று பல படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தின. கதாபாத்திரமாக மாற தன்னை வருத்திக்கொள்வார் என்ற பாராட்டும் அவருக்கு உண்டு.

சூர்யா நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளத்தில் நடிகர்கள் மோகன்லால், ராணா, ஆர்யா, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி, விஜய் ஆண்டனி, சூரி, சிபி சத்யராஜ், துல்கர் சல்மான், அருண் விஜய், நடிகைகள் ரகுல்பிரீத் சிங், ராஷ்மிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதா, இயக்குனர்கள் கே.வி. ஆனந்த், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்ட திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாள் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. சூர்யா பிறந்த நாளையொட்டி அவர் நடித்துள்ள சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்துக்கு பிறகு சூர்யா ஹரி இயக்கும் அருவா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கிறார். வாடி வாசல் படத்தில் அவரது முதல் தோற்றத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு நேற்று வெளியிட்டார்.

Next Story