3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது


3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது
x
தினத்தந்தி 25 July 2020 7:09 AM IST (Updated: 25 July 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது செய்யப்பட்டார்.


தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில் 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன். பிறகு என்னோடு வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார். மூன்று முறை கருக்கலைப்பும் செய்தார். தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story