இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் - உரிய விசாரணை நடத்தி வழக்குபதிவு என தகவல்


இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் - உரிய விசாரணை நடத்தி வழக்குபதிவு என தகவல்
x
தினத்தந்தி 25 July 2020 4:57 AM GMT (Updated: 2020-07-25T10:27:34+05:30)

நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர், இ-பாஸ் இல்லாமல், கொடைக்கானலுக்கு வந்துள்ளதாக, கோட்டாட்சியர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல்,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் 70 நாட்களுக்கும் மேலாக கொரோனா இல்லாத கொடைக்கானலாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 20 நாட்களில் அங்கு 170-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானலுக்குள் வரும் வெளியூரைச் சேர்ந்த நபர்கள், முறையான இ-பாஸ் மற்றும் கொரோனா தொற்று குறித்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் முன்னதாக ஊடரங்கு காலத்தில் பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக, நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோருக்கு வனத்துறை சார்பில் தலா ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் விமல் மற்றும் சூரி உட்பட இயக்குனர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15 ஆம் தேதி வந்தததும் உள்ளூர் நபர் ஒருவர் உதவியுடன் அவர்கள் கொடைக்கானலில் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறியுள்ளதாகவும் கோட்டாட்சியர் சிவகுமார் தெரிவித்தார்.Next Story