“என்னை கண்டு பயந்து ஓடிய ரோமியோக்கள்” - ரித்திகாசிங்
மாதவன் கதாநாயகனாக நடித்து, சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக அறிமுகமானவர், ரித்திகாசிங். அடுத்து, ‘ஆண்டவன் கட்டளை,’ ‘சிவலிங்கா,’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக மிரட்டியவர், ‘ஓ மை கடவுளே’ படத்தில் பேயாக பயமுறுத்தினார்.
“இதனால், என்னைப் பார்த்து யாரும் காதல்வசப்படவில்லை. என்னிடம் வந்து யாரும் காதலை சொன்னதில்லை. என்னை யாரும் ஆசையுடன் பார்த்தது இல்லை. கொஞ்சம் தள்ளியே நிற்பார்கள். என்னை கண்டு பயந்து ஓடிய ரோமியோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த பயத்தைப் போக்க இனிமேல் காதல்வசப்படுத்தும் வேடங்களில் நடிக்கப் போகிறேன். பாவாடை-தாவணியில் கிராமத்து குறும்பு பெண்ணாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்கிறார், ரித்திகாசிங்.