கொரோனாவில் இருந்து குணமானது எப்படி? - நடிகர் விஷால் விளக்கம்


கொரோனாவில் இருந்து குணமானது எப்படி? - நடிகர் விஷால் விளக்கம்
x
தினத்தந்தி 27 July 2020 12:43 AM GMT (Updated: 2020-07-27T06:13:20+05:30)

கொரோனாவில் இருந்து குணமானது எப்படி என்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

நடிகர் விஷால் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது எனது கட்டாயம். எனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு நான் அழைத்து செல்லவில்லை. ஆஸ்பத்திரிக்கு எதிராக இருப்பதாக நினைக்க வேண்டாம். வீட்டில் வைத்து அவரை கவனித்து கொண்டேன். இதனால் எனக்கும் அதே அறிகுறிகள் ஏற்பட்டன. காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. எனது மானேஜர் ஹரிக்கும் தொற்று ஏற்பட்டது. நாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டோம். 4 நாட்களில் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறைந்தன. 7 நாட்களில் முழுமையாக குணமடைந்தோம். ஆயுர்வேத மருந்தை நான் விற்பதற்காக சொல்லவில்லை. எங்களை எது காப்பாற்றியது என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை பகிர்கிறேன். நான் எல்லோருக்கும் சொல்வது கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் பயப்படாதீர்கள். பயம்தான் நிறைய பேரை இக்கட்டான சூழலுக்கு கொண்டு போய் உள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடுவேன் என்ற மன தைரியத்தில் ஆயுர்வேத மாத்திரை சாப்பிட்டால் சரியாகிடும். எனக்கும் அப்பாவுக்கும் அந்த மன தைரியம் இருந்ததால் ஆபத்தில் இருந்து மீண்டு சாதாரண வாழ்க்கைக்கு வந்து விட்டோம்.”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Next Story