2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா மரணம்


2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா மரணம்
x
தினத்தந்தி 28 July 2020 1:07 AM GMT (Updated: 2020-07-28T06:37:08+05:30)

2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா மரணமடைந்தார்.


பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா டி.ஹேவிலேண்ட். இவர் த மிட் சம்மர் நைட் டிரீம்ஸ், கேப்டன் பிளட், த அட்வன்சர்ஸ் ஆப் ராபின் ஹூட், த கிரேட் கார்ரிக், ஹார்ட் டு கெட், மை லவ் கேம் பேக் உள்பட 45௺-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1946௺-ல் வெளியான டு ரீச் ஹிஸ் இன் மற்றும் 1949௺-ல் வெளியான த ஹேர்ரஸ் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதாக பாராட்டுகள் கிடைத்தன. இந்த 2 படங்களிலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளையும் பெற்றார். மேலும் பல படங்களில் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை பெற்று இருக்கிறார். பாரிஸ் நகரில் வசித்து வந்த ஒலிவியா டி.ஹேவிண்டுக்கு வயது முதிர்வினால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 104. ஒலிவியா மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story