சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் + "||" + Telugu actor Nitin gets married at Corona curfew

கொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம்

கொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம்
கொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது.

பிரபல தெலுங்கு நடிகர் நிதின். இவர் 2002-ல் ஜெயம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ஜெயம் ரவி நடிக்க ஜெயம் என்ற பெயரிலேயே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தில், சம்பாரம், தைரியம், ராம், தாக்கரி, விக்டரி, ஹீரோ, துரோனா, சீனிவாச கல்யாணம் உள்பட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கு குடுமுலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நிதினுக்கு ஷாலினி என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16௺-ந்தேதிகளில் துபாயில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். கொரோனால் அது நடக்கவில்லை. “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமானது. உயிர் அதை விட முக்கியம் எனவே திருமணத்தை தள்ளி வைத்தோம்” என்று நிதின் கூறினார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்ஷாலினி திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரண் தேஜ் மற்றும் நிதின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
2. கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி: தமிழக அரசு
டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.
4. ரெஜினாவின் கொரோனா ஊரடங்கு அனுபவம்
நடிகை ரெஜினா தனது கொரோனா ஊரடங்கு அனுபவம் பற்றி விளக்குகிறார்.
5. கொரோனா ஊரடங்கு: 6 மாதங்களுக்கு பின் பல்லாவரம் வாரசந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.