இந்தி பட உலகினர் “ஆஸ்கார் விருது வென்றதும் என்னையும் ஒதுக்கினர்” - ரசூல் பூக்குட்டி


இந்தி பட உலகினர் “ஆஸ்கார் விருது வென்றதும் என்னையும் ஒதுக்கினர்”  - ரசூல் பூக்குட்டி
x
தினத்தந்தி 28 July 2020 1:21 AM GMT (Updated: 2020-07-28T06:51:01+05:30)

இந்தி பட உலகினர் ஆஸ்கார் விருது வென்றதும் தன்னையும் ஒதுக்கியதாக ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.


இந்தி பட உலகினர் உறவினர்களை மட்டுமே வளர்த்து விடுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இந்தி படங்களில் தன்னை பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று குறைகூறி உள்ளார். இந்த நிலையில் ஸ்லாம்டாக் மில்லினர் படத்தின் ஒலிக் கலவைக்காக ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் இதே குற்றசாட்டை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘’ஆஸ்கார் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை ஒதுக்கியது. யாரும் வாய்ப்பு தரவில்லை. இதனால் அதிர்ச்சியானேன். சில பட நிறுவனங்கள் நேரடியாகவே என்னை ஒதுக்குவதாக தெரிவித்தன. ஆனால் பிராந்திய மொழி படங்கள் என்னை கைவிடவில்லை. என்னை நம்புகிறவர்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள். என்னால் ஹாலிவுட்டுக்கு சென்று இருக்க முடியும். ஆனால் இங்கிருந்து பணியாற்றவே விரும்புகிறேன்” என்றார்.

Next Story