சினிமா செய்திகள்

சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து + "||" + Actor and actresses congratulate Ajith for 28 years in cinema

சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து

சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்குமார் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து அசல், வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அவரது 28 வருட திரையுலகை கவுரவிக்கும் வகையில் நடிகர்கள் பிரசன்னா, பிரேம்ஜி, மகத், நடிகை பூனம் பாஜ்வா, நிக்கி கல்ராணி, பார்வதி நாயர், நந்திதா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஜித்குமாரின் பொது முகப்பு படத்தை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள்.

 நடிகர் பிரசன்னா டுவிட்டர் பக்கத்தில், “நடிகராக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலுசேர்த்து, என்னை நானே செதுக்கி கொள்ள கற்றுக்கொடுத்து தோல்விகளை கடந்து கஷ்ட காலத்தில் என்னை தாங்கி பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றியது அஜித்குமார்” என்று பாராட்டி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நூதன கொள்ளையர்களும், துப்பறிந்து பிடிக்கும் ராணுவ வீரரும் சக்ரா - விமர்சனம்
போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு அதிபுத்திசாலித்தனமாக அந்த கொள்ளைகள் நிகழ்ந்திருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். சக்ரா படத்தின் சினிமா விமர்சனம்.
2. கொரோனா அச்சம்: அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம்
கொரோனா அச்சம் காரணமாக அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. சினிமாவுக்கு, தொழில் துறை அந்தஸ்து வழங்க திட்டம் - மந்திரி அமித் தேஷ்முக் தகவல்
சினிமா துறைக்கு, தெழில்துறை அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மந்திரி அமித் தேஷ்முக் கூறியுள்ளார்.
4. வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியாகியுள்ளது.
5. பாலியல் துன்புறுத்தல் எனக்கே நடந்திருக்கிறது - நடிகை கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்
நடிகை கஸ்தூரி தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.