நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்


நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
x
தினத்தந்தி 28 July 2020 8:33 AM GMT (Updated: 2020-07-28T14:03:36+05:30)

நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.

சென்னை

நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.

கோப்ரா படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மீதமிருப்பதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்ததோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘தும்பி துள்ளல்’ என்ற முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து விக்ரமின் ஸ்டைலான லுக் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் கொல்கத்தாவில் கோப்ரா பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் இர்ஃபான் பதான், தான் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருப்பதாகவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இர்ஃபான் பதான் இத்திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இர்ஃபான் பதானைப் போல் ஹர்பஜன் சிங்கும் ஃபிரெண்ட்ஷிப், டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.Next Story