சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா + "||" + Aishwarya Arjun recovers from COVID-19

கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா

கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா
நடிகர் அர்ஜூன் மகள், ஐஸ்வர்யா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
 
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில கன்னட படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் அர்ஜூன் இயக்கத்தில் உருவான 'சொல்லி விடவா' படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவிற்கு கடந்த திங்களன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவ குழுவினர் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடல்நலம் தேறியதும் தகவல் அளிக்கிறேன். அனைவருக்கும் எனது அன்பு என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறுதலும், பிரார்த்தனைகளும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில்,

எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது. கடவுளின் கருணையினால் எனக்கு கொரோனா பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. எனக்காக பிரார்த்தித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். அனைவருக்கும் எனது அன்பு! என பதிவிட்டுள்ளார்.