முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் நிலத்தை வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?


முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் நிலத்தை வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?
x
தினத்தந்தி 29 July 2020 11:23 AM GMT (Updated: 2020-07-29T16:53:24+05:30)

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் முறைகேடான நிலத்தை வாங்கி நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராவிர்யால் எனற பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோரிடம் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்று ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் மூவரும் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. சச்சின் ஆறு ஏக்கர் நிலமும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தலா ஒரு ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் என்ற விகிதத்தில் நிலங்களை வாங்கி பத்து கோடிக்கு விற்றதாக கூறப்படுகிறது.

நிலத்தை விற்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்த மோதலால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் அஞ்சலி தெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவார்களா என்பது கேள்வி எழுந்துள்ளது.


Next Story