சினிமா செய்திகள்

பிரபல தெலுங்கு நடிகர் மரணம் + "||" + Famous Telugu actor dies

பிரபல தெலுங்கு நடிகர் மரணம்

பிரபல தெலுங்கு நடிகர் மரணம்
பிரபல தெலுங்கு நடிகரான ரவி கொண்டலா மரணமடைந்தார்.
பிரபல மூத்த தெலுங்கு நடிகர் ரவி கொண்டலா. இவர் ராமுடு பீமுடு, தெனே மனசுல, அண்டல ராமுடு, ஜீவித சக்ரம், பெல்லி புஸ்தகம், ராதா கோபாலம், கிங், வருடு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை இயக்கி உள்ளார். திரைக்கதையும் எழுதி உள்ளார். தெலுங்கில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2015-ல் திரைக்கு வந்த 365 டேஸ் என்ற படத்தில் கடைசியாக நடித்து இருந்தார்.

ரவி கொண்டலாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ரவி கொண்டலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. ரவி கொண்டலா மறைவுக்கு ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்
ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்.
2. விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு - கமல்ஹாசன்
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று நடிகரும், மக்கள்நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம்
வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் நேற்று மரணம் அடைந்தார்.
4. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
5. பிரபல டைரக்டர் மரணம்
பிரபல மலையாள டைரக்டர் டி.எஸ்.மோகன் மரணம் அடைந்தார்.