நடிகை அஞ்சலி ராவுக்கு ஆண் குழந்தை


நடிகை அஞ்சலி ராவுக்கு ஆண் குழந்தை
x
தினத்தந்தி 30 July 2020 1:35 AM GMT (Updated: 2020-07-30T07:05:22+05:30)

நடிகை அஞ்சலி ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


தமிழில் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்தவர் அஞ்சலி ராவ். சூதுகவ்வும், பீட்சா2, வன்மம், சில சமயங்களில், மாலினி 22 பாளையங்கோட்டை, அண்ணனுக்கு ஜே, செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். படத்தொகுப்பாளர் ஜோமினும் அஞ்சலி ராவும் திருமணம் செய்து கொண்டனர். அஞ்சலி ராவ் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அஞ்சலி ராவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story