சினிமா செய்திகள்

எனக்கு மனநிலை சரியில்லை என்பதா? - நடிகை ஓவியா வருத்தம் + "||" + Am I in a bad mood? - Actress Ovia upset

எனக்கு மனநிலை சரியில்லை என்பதா? - நடிகை ஓவியா வருத்தம்

எனக்கு மனநிலை சரியில்லை என்பதா? - நடிகை ஓவியா வருத்தம்
தனக்கு மனநிலை சரியில்லை என்று சிலர் கூறுவதாக, நடிகை ஓவியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஓவியாவை வெளியேற்றினர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஓவியா பேச தொடங்கி உள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். போட்டியாளர்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் தொந்தரவு செய்ய கூடாது. தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் நிலைமை தமிழ்நாட்டில் இன்னொருவருக்கு வரக்கூடாது என்ற பதிவுகளையும் வெளியிட்டார். இது பரபரப்பானது. அவரது பதிவுகளை பார்த்த ரசிகர்கள் பணம் புகழுக்காக பிக்பாஸ் ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்திடுகிறீர்களே? பிக்பாஸ் சீசன் 1 முடிந்ததுமே இதை நீங்கள் சொல்லி இருக்கலாமே என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஓவியா “மற்றவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டும் வகையில் ஓப்பந்தத்தை பயன்படுத்த கூடாது. நிகழ்ச்சியை முழுமையாக தடை செய்ய நான் சொல்லவில்லை. இதனை முன்பே என்னால் எப்படி சொல்லி இருக்க முடியும்.? ஏற்கனவே எனக்கு மன நிலை சரியில்லை என்று பிரபலப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். மன ஆறுதலுக்காகவே இப்போது இதனை சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.