சினிமா செய்திகள்

திருமணத்துக்கு பிறகும் அதிக பட வாய்ப்புகள் - சமந்தா மகிழ்ச்சி + "||" + More Picture Opportunities After Marriage - Samantha Happiness

திருமணத்துக்கு பிறகும் அதிக பட வாய்ப்புகள் - சமந்தா மகிழ்ச்சி

திருமணத்துக்கு பிறகும் அதிக பட வாய்ப்புகள் - சமந்தா மகிழ்ச்சி
திருமணத்துக்கு பிறகும் அதிக பட வாய்ப்புகள் வருவதாக நடிகை சமந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கில் நடித்த நிறைய படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன. இனிமேல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். திருமணமானதும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வராது என்று என்னிடம் பலர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன பிறகும் எனக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தன. திருமணத்துக்கு பிறகு ஐந்து படங்கள் நடித்து விட்டேன். தமிழில் கத்தி, தெறி, இரும்புத்திரை போன்ற வெற்றி படங்களில் நடித்தேன். எனது 11 வருட சினிமா வாழ்க்கை மகிழ்ச்சியாக கழிந்துள்ளது. இந்த பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கஷ்டங்கள் இருந்தன. சந்தோஷம் இருந்தது. இந்த பயணத்தில் என்னோடு சேர்ந்து நின்ற எல்லோருக்கும் நன்றி. சமூக வலைத்தளத்திலும் என்னை பின் தொடரும் ரசிகர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.”

இவ்வாறு சமந்தா கூறினார்.