“சுற்றுச்சூழல் காக்க மவுனம் கலைப்போம்” - நடிகர் சூர்யா


“சுற்றுச்சூழல் காக்க மவுனம் கலைப்போம்” - நடிகர் சூர்யா
x
தினத்தந்தி 30 July 2020 2:02 AM GMT (Updated: 2020-07-30T07:32:03+05:30)

சுற்றுச்சூழல் காக்க மவுனம் கலைப்போம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவை இல்லை என்று வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாகவும் மக்கள் கருத்து கேட்காமல் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் மூலமாக இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என்று கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “பேசிய வார்த்தைகளை விட பேசாத மவுனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க. நம் மவுனம் கலைப்போம்” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் அறிக்கையையும் பகிர்ந்துள்ளார்.

Next Story