சினிமா செய்திகள்

தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட நடிகை + "||" + actor danush birth day wish

தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட நடிகை

தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட நடிகை
தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை ஒருவர் அவருடன் படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
சென்னை

தமிழ் சினிமாவுக்கு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த தனுஷ் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது தனித்துவமான நடிப்பாலும் சிறந்த கதை தேர்வாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் தனுஷ். இந்தநிலையில் நேற்று நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தனுசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி டுவீட் செய்த மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன், “பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிக்க உற்சாகமாக இருக்கிறேன். யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனின் பதிவைப் பார்த்த ரசிகர்கள், தனுஷ் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்து சான்ஸ் கேட்பதாக கேலி செய்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.