சினிமா செய்திகள்

வெப் தொடரில் வடிவேல் + "||" + Vadivelu in the web series

வெப் தொடரில் வடிவேல்

வெப் தொடரில் வடிவேல்
நகைச்சுவை நடிகர் வடிவேல் வெப் தொடரில் நடிக்கிறார்.
சென்னை,

நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில் வடிவேல் திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் வற்புறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்த மாதிரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யராஜ், பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, சீதா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடரில் விஜய் சேதுபதி
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கில் அதிக தொடர்கள் தயாராகின்றன.
2. வெப் தொடரில் ஆபாசமாக நடித்த பூஜாகுமார்
நடிகை பூஜாகுமார் வெப் தொடரில் ஆபாசமாக நடித்துள்ளார்.