சினிமா செய்திகள்

ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதா? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா நோட்டீஸ் + "||" + 1.25 crore and intimidation? Actress Vanitha notice to Lakshmi Ramakrishnan

ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதா? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா நோட்டீஸ்

ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதா? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா நோட்டீஸ்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை,

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. ஏற்கனவே திருமணமான பீட்டர்பாலை முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் வனிதா மணந்தது தவறு என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு உருவானது. இணைய நேரலை நிகழ்ச்சியில் “வாடி! போடி” என்று மோதிக்கொண்டனர். இதையடுத்து வனிதாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் தன்னையும் தனது கணவரையும் அவதூறாக பேசியதற்காக குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் இந்த நோட்டீசை அனுப்பி இருப்பதாக அவர் கூறினார்.

இந்த வக்கீல் நோட்டீஸ் தகவலை நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “என் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிட்டு போலி நீதிபதியாக இருக்க முயலும் நல்ல மனம் கொண்ட சமூக ஆர்வலர் தனக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் தரவேண்டும் என்று வக்கீல் மூலம் என்னை மிரட்டுகிறார். அவர் அனுப்பி இருப்பது கோர்ட்டு ஆவணம் இல்லை. நானும் அவருக்கு எனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்ப உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் பரபரப்பாகி உள்ளது.