சினிமா செய்திகள்

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி + "||" + Corona for 8 people in the TV shoot; One killed

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
மும்பை,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்தி தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தெலுங்கு டி.வி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவருடன் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணாவுக்கும் தொற்று உறுதியானது.

இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பாஹர்வாடி நகைச்சுவை படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

பாஹர்வாடி இந்தி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இதில் போஜானி, பரேஸ் கனட்ரா, ஸ்மிதா சர்வாதே, பக்தி ரத்தோட் உள்பட பலர் நடிக்கின்றனர். பாஹர்வாடி படப்பிடிப்பில் கொரோனா பரவியது குறித்து தயாரிப்பாளர் ஜேடி மஜிதியா கூறும்போது, “படப்பிடிப்பில் பங்கேற்ற டெய்லர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது” என்றார். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. இது சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: "ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,638- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24, 638- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணிக்கு உரை
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணிக்கு உரையாற்றுகிறார்.
5. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.