கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது


கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது
x
தினத்தந்தி 31 July 2020 9:54 PM GMT (Updated: 2020-08-01T03:24:02+05:30)

கர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.

பெங்களூரு,

கன்னட இளம் நடிகை ரிசிகா சிங். இவர் கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபுவின் மகள் ஆவார். ரிசிகா சிங் கண்டீவீரா என்ற கன்னட படத்தில் துனியா விஜய் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கல்லா மல்லா, பெங்கி பிருகாலி, சுதீப்புடன் மாணிக்யா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளையமகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது காரில் பெங்களூருக்கு ரிசிகா சிங் திரும்பிக்கொண்டு இருந்தார். காரில் நடிகர் ஜக்தீஷின் இன்னொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை இன்னொருவர் ஓட்டினார். எலஹங்கா மவல்லிபுரா சாலையில் கார் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் நின்ற மரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ரிசிகா சிங் உள்பட 3 பேருக்கும் பலத்த அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் ரிசிகா சிங்குக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story