சினிமா செய்திகள்

ஓ.டி.டியில் வரும் டேனி, லாக்கப் + "||" + Danny, Lockup, coming to OTT

ஓ.டி.டியில் வரும் டேனி, லாக்கப்

ஓ.டி.டியில் வரும் டேனி, லாக்கப்
டேனி, லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளன.
சென்னை,

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் 4 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் நேரடியாக ரிலீசாகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. வித்யாபாலன் நடித்துள்ள சகுந்தலாதேவி படம் நேற்று இணைய தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் தமிழில் மேலும் 2 படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகிறது. சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ள டேனி படம் இன்று ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார். அதிரடி கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது. இதுபோல் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன் நடித்துள்ள லாக்கப் படம் வருகிற 14-ந்தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துப்பறியும் திகில் படமாக தயாராகி உள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ள இந்த படத்தை எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். மேலும் சில படங்கள் அடுத்தடுத்து ஓ.டி.டி தளத்தில் ரிலீசாக உள்ளன.