சினிமா செய்திகள்

கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி + "||" + Topsy is a mature actress in story selection

கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி

கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி
கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவம் பெற்றேன் என நடிகை டாப்சி கூறியுள்ளார்.
சென்னை,

கொரோனா ஊரடங்கில் நடிகை டாப்சி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனது 10 வருட சினிமா வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகிகள் பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இரு மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு வெற்றிகள் கிடைத்தன.

இந்தியில் நடித்த பிங்க் படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்தன. நானும் கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவத்தை பெற்றேன்.

அதற்கு முன்பு எனக்கு கதைகள் தேர்வில் அவ்வளவு அனுபவம் இல்லாமல் இருந்தது. வந்த படங்களில் எல்லாம் நடித்தேன்.  தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு எல்லா பாடமும் கற்றுக்கொடுத்தது. பல இந்தி படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் 3 இந்தி படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளேன். தமிழ், தெலுங்கு படங்களிலும் மீண்டும் நடிக்க இருக்கிறேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு
ஸ்பெயின் நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
2. காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு
நமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
3. ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி
எனது 6 மாத கால ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
4. மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி
மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
5. ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா
ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.