3 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் சோனு சூட்


3 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் சோனு சூட்
x
தினத்தந்தி 1 Aug 2020 1:39 AM GMT (Updated: 2020-08-01T07:09:22+05:30)

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக சோனு சூட் அறிவித்து இருக்கிறார்.

மும்பை,

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த வில்லன் நடிகர் சோனுசூட் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடுமுழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

மாடுவாங்க பணமில்லாமல் தனது 2 மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். சோனு சூட் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது பிறந்த நாளையொட்டி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவத்தை புத்தகமாகவும் எழுதுகிறார்.


Next Story