சினிமா செய்திகள்

பிரபல டைரக்டரிடம் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு அனுஷ்கா வாக்குவாதம் + "||" + Anushka claims Rs 3 crore salary for famous director

பிரபல டைரக்டரிடம் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு அனுஷ்கா வாக்குவாதம்

பிரபல டைரக்டரிடம் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு அனுஷ்கா வாக்குவாதம்
பிரபல டைரக்டரிடம் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு அனுஷ்கா வாக்குவாதம் செய்துள்ளார்.
சென்னை,

நடிகை அனுஷ்கா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவுக்கு வரும் முன்பு குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பின், ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி, அங்கேயே வசித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய படங்கள் 3 மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. அதனால் அனுஷ்கா ஒரு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்.

அவரை ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. அந்த படத்தை ஒரு நட்சத்திர டைரக்டர் இயக்குகிறார். இதற்காக அனுஷ்காவை சந்தித்து அவர் கதை சொன்னார். அனுஷ்காவுக்கு கதை பிடித்து இருந்தது. படத்தில் நடிக்க 60 நாட்கள் தேதிகள் வேண்டும் என்று டைரக்டர் கேட்டார்.

அதற்கு அனுஷ்கா சம்மதம் தெரிவித்தார். 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்டார். அந்த சம்பளத்தை கொடுக்க டைரக்டர் தயங்கினார். “நான் 3 மொழி படங்களிலும் ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் ‘டப்’ செய்யப்படுகின்றன. அதனால் எனக்கு ரூ.3 கோடி சம்பளத்தை தாராளமாக கொடுக்கலாம்” என்று அனுஷ்கா கூறினார்.

“இந்த படத்தின் கதாநாயகனுக்கு (விஜய் சேதுபதிக்கு) ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கும்போது, எனக்கு ரூ.3 கோடி தரக்கூடாதா?” என்று வாக்குவாதம் செய்தார். அதன்பிறகு அனுஷ்காவுக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்க டைரக்டரும், தயாரிப்பாளரும் சம்மதித்தார்களாம்.