சினிமா செய்திகள்

டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்தார் + "||" + Director Ajay Gyanamuthu halved his salary

டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்தார்

டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்தார்
டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார்.
சென்னை,

நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம், ‘இமைக்கா நொடிகள்.’ அஜய் ஞானமுத்து டைரக்டு செய்திருந்தார். படம் வெற்றி பெற்றதுடன், படத்தில் இடம்பெற்றிருந்த “நீயும் நானும்...” என்ற பாடல் பல கோடி பார்வையாளர்களை கவர்ந்தது. அதை டைரக்டர் அஜய் ஞானமுத்துவும், அவரது குழுவினரும் கொண்டாடினார்கள்.

அஜய் ஞானமுத்து இப்போது, ‘கோப்ரா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில், கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். கதாநாயகி, ஸ்ரீநிதி செட்டி. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்தநிலையில், டைரக்டர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டாராம். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், சம்பள குறைப்பு செய்து கொண்டதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்
அ.தி.மு.க. பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்.
2. முதல் கட்டமாக 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: நாராயணசாமி தகவல்
புதுவையில் முதல்கட்டமாக 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. எங்களது ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும்; சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்
எங்களது ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும் என்று தசரா பேரணியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
4. கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள்; மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
5. இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.