ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனபின், விஜயா புரொடக்சன்ஸ் தனது தயாரிப்பு பணியை தொடரும் என்று அந்த பட நிறுவனம் கூறுகிறது.
சென்னை,
தமிழ் திரையுலகின் பாரம்பரியமான பட நிறுவனங்களில், விஜயா புரொடக்சன்ஸ்சுக்கு முக்கிய இடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப்பிள்ளை,’ ‘நம்நாடு,’ சிவாஜிகணேசன் நடித்த ‘வாணி ராணி,’ ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி,’ ‘கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்,’ விஜய் நடித்த ‘பைரவா,’ அஜித் நடித்த ‘வீரம்‘ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம், இது.
விஜய் சேதுபதி நடிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்து கடந்த வருடம் வெளிவந்த ‘சங்க தமிழன்’ படம் தோல்வி அடைந்தது. பல வெற்றி படங்களை தயாரித்த அந்த பட நிறுவனம், ஒரே ஒரு படத்தில் சறுக்கி விட்டது. (“டைரக்டர் சொன்ன கதை ஒன்று...படமாக்கிய கதை வேறு...இதுவே தோல்விக்கு காரணம்” என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.)
என்றாலும், இந்த பட நிறுவனம் தொடர்ந்து படம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனபின், விஜயா புரொடக்சன்ஸ் தனது தயாரிப்பு பணியை தொடரும் என்று அந்த பட நிறுவனம் கூறுகிறது.
கொரோனா பரவலை தொடர்ந்து 9-வது முறையாக ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.