சினிமா செய்திகள்

திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு + "||" + Actress Julie protests against marriage scandal

திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு

திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு
திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
சென்னை,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தற்போது நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு; முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
தேர்தல் ஆணையத்தின் 24 மணிநேர பிரசார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
2. புன்னப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு
புன்னப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஐ.பி.எல். ஆட்டங்களை 6 நகரங்களில் நடத்த முயற்சி: பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்ப்பு
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
4. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; அரை நிர்வாண போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.