சினிமா செய்திகள்

டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’ + "||" + 'Prisoner' at Toronto International Film Festival

டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’

டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’
டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’ படம் தேர்வாகி உள்ளது.
சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜூன் தாஸ், ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மையப்படுத்தி வந்த கைதியின் வெற்றி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நல்ல லாபம் பார்த்தனர். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் அஜய்தேவ்கான் நடிக்க கைதியை ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்துக்கு பிறகுதான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கைதி படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. இது கைதி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
2. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.
3. பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்சில் புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
4. கேரளாவில் தொடரும் அவலம்; கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
கேரளாவில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண் ஒருவரை இளநிலை சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5. புதிய தேசிய கல்வி கொள்கை உண்மையில் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது; சோனியா காந்தி
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்புடைய அறிவிப்புகள் வருத்தம் அளிப்பதுடன் உண்மையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என சோனியா காந்தி கூறியுள்ளார்.