சினிமா செய்திகள்

65 வயது முதியவராக உதயா + "||" + Udaya is 65 years old

65 வயது முதியவராக உதயா

65 வயது முதியவராக உதயா
65 வயது முதியவராக நடிகர் உதயா நடித்துள்ளார்.
சென்னை,

திருநெல்வேலி, கலகலப்பு, தலைவா, பூவா தலையா, உத்தரவு மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள உதயா தற்போது சிம்புவுடன் மாநாடு மற்றும் அக்னிநட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் ‘செக்யூரிட்டி’ என்ற குறும்படத்தை முதல் தடவையாக இயக்கி 65 வயது முதியவர் வேடத்தில் நடித்து இருக்கிறார்.

தமிழ், இந்தி படங்களில் நடித்து பிரபலமான கோமல் ஷர்மா கதையின் நாயகியாகவும் மற்றும் புதுமுகம் மணிகண்டன் சிவதாஸ், உதயாவின் மகன் மாஸ்டர் ஜேஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் விவேக், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, விஜய், மனோபாலா, ஆகியோர் பாராட்டி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் சேவையை போற்றும் வகையில் படம் தயாராகி உள்ளது என்றும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் உதயா கூறியுள்ளார்.