திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை


திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை
x
தினத்தந்தி 4 Aug 2020 12:24 AM GMT (Updated: 2020-08-04T05:54:25+05:30)

திருமண வாழ்க்கை கசந்ததில் இந்தி நடிகை மினிஷா லம்பா கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

புனே,

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா. யஹான் என்ற படத்தில் அறிமுகமான இவர் சஞ்சய்தத்துடன் கிட்னாப் மற்றும் கார்பரேட், ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், அனாமிகா, ஹம் தும் ஷபானா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஜில்லா காளியாபாத், பேஜா பிரை ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக பாராட்டு பெற்றார். இறுதியாக அவரது நடிப்பில் பூமி படம் வெளியானது. இதில் சஞ்சய்தத், அதிதிராவ் ஹைத்ரி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

மினிஷா ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் ரியான் என்பவரை 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இல்லற வாழ்க்கை கசந்து கணவரை பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. இதனை மினிஷாவும் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது. “நானும் ரியானும் பிரிந்தது உண்மைதான். திருமண வாழ்க்கையை சுமுகமாக முறித்துக்கொள்ள முடிவு செய்தோம். பின்னர் கோர்ட்டுக்கும் சென்று விவாகரத்து பெற்று விட்டோம்” என்றார்.

Next Story