சினிமா செய்திகள்

நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது + "||" + 4 arrested for intimidating actor Mohanbabu

நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது

நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது
நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இவர் தமிழில் அண்ணன் ஒரு கோவில், ரத்தபாசம், வெற்றிக்கு ஒருவன், தாய்மீது சத்தியம், குரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வர உள்ளது. மோகன்பாபு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜல்லப்பள்ளியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த வீட்டுக்கு 4 பேர் காரில் வந்து இறங்கினார்கள். பாதுகாவலரிடம் மோகன்பாபு வீட்டில் இருக்கிறாரா? என்று விசாரித்தபடி அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாவலர் தடுத்ததும் மிரட்டி தாக்கினர். தகவல் அறிந்து மோகன்பாபு கீழே வந்ததும் தப்பி ஓடினர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மோகன்பாபு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மிரட்டிய ராகவேந்திரா, ஆனந்த், டேவிட், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. என்.ஐ.ஏ. கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தான் தலைமையுடன் நேரடி தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
2. கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருள் பறிமுதல்
கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆசிரியரின் தேர்வுகள்...