ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம் செய்து கொண்டார்.
பிரபாஸ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தை இயக்கி பிரபலமானவர் சுஜீத், மெகா பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. சர்வானந்த், ஸ்ரத்தா கபூர் நடித்த ரன் ராஜா ரன் படத்தையும் இயக்கி உள்ளார். அடுத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சுஜித் சில வருடங்களாக பிரவள்ளி என்ற பெண்ணை காதலித்து வந்தார். பிரவள்ளி பல் மருத்துவராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சுஜித்பிரவள்ளி திருமணம் கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.