சினிமா செய்திகள்

நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை + "||" + Girl child for actor Nagul

நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை

நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை
நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை,

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாக போகிறேன். வல்லினம் போன்ற படங்களும் அவரது நடிப்பில் வந்தன. தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நகுல் 2016-ல் ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதி கர்ப்பமாக இருந்தார். இதனை சில மாதங்களுக்கு முன்பு நகுல் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். ஸ்ருதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் விரல்களை பிடித்திருக்கும் புகைப்படத்தை நகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எங்கள் வாழ்க்கையும் மேஜிக் ஆகி இருக்கிறது. மகள் பிறந்திருக்கிறாள் என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.