படப்பிடிப்பில் பங்கேற்ற டைரக்டருக்கு கொரோனா


படப்பிடிப்பில் பங்கேற்ற டைரக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Aug 2020 12:05 AM GMT (Updated: 2020-08-05T05:35:01+05:30)

படப்பிடிப்பில் பங்கேற்ற டைரக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கை சில மாநிலங்கள் தளர்த்தி தொலைக் காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்கள் படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளன. ஆனால் இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வருகின்றன. ஏற்கனவே தெலுங்கு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமி, அவருடன் இணைந்து நடித்த ரவிகிருஷ்ணா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பாஹர்வாடிஎன்ற இந்தி நகைச்சுவை தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியானார். அதே படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் தெலுங்கு வெப் தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் தேஜாவும் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவிதேஜா தெலுங்கில் ஜெயம், சித்திரம், நேனு ராஜூ நேனு மந்திரி, ஒக்க வி சித்திரம், நிஜம் உள்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார்.

Next Story