சினிமா செய்திகள்

உலக புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாகிறது + "||" + World famous footballer David Beckham's life becomes a movie

உலக புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாகிறது

உலக புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாகிறது
உலக புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாகிறது.
சென்னை,

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட முன்னாள் வீரர் டேவிட் பெக்காம். இவர் ஏராளமான சேம்பியன் பட்டங்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். கால்பந்து விளையாட்டு தவிர யுனிசெப் மற்றும் மலேரியா நோய் தடுப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார். ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார். 2018-ம் ஆண்டுக்கான உயரிய யு.இ.எப்.ஏ.வின் தலைருக்கான விருதினையும் வென்றார்.

இந்த நிலையில் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன என்றும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது என்றும் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கை தி லாஸ்ட் டான்ஸ் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு
கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.