சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் புதிய ஆல்பம் ‘நான் ஒரு ஏலியன்’ + "||" + Tamil Hiphop in India back with another Independent Album Naa Oru Alien

ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் புதிய ஆல்பம் ‘நான் ஒரு ஏலியன்’

ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் புதிய ஆல்பம்  ‘நான் ஒரு ஏலியன்’
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி, சுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்.
சென்னை

2012-ல் வெளிவந்த‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ‘ஹிப் ஹாப்’ ஆதி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டார்.

வணக்கம் சென்னை, எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ள ஆதி, ஆம்பள, தனி ஒருவன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதையடுத்து மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்த ஹிப் ஹாப் ஆதி, அடுத்தடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகனாக நடித்து வந்தாலும் இசை ஆல்பங்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஹிப் ஹாப் ஆதி தற்போது புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

‘நான் ஒரு ஏலியன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் முதல் பாடல் நாளை வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி முழு ஆல்பமும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம்
ஹிப் ஹாப் ஆதியே புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.