மீண்டும் படம் இயக்குவேன் - ஹிப் ஹாப் ஆதி


மீண்டும் படம் இயக்குவேன் - ஹிப் ஹாப் ஆதி
x
தினத்தந்தி 6 Aug 2020 12:15 AM GMT (Updated: 2020-08-06T05:45:52+05:30)

மீண்டும் படம் இயக்குவேன் என்று பாடலாசிரியர் ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார்.


ஆம்பள, தனி ஒருவன், கதக்களி, கத்தி சண்டை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், மிஸ்டர் லோக்கல், ஆக்‌ஷன், கோமாளி உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ள ஹிப்ஹாப் ஆதி, மீசையை முறுக்கு படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார். நட்பே துணை, நான் சிரித்தால் படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 2012-ல் வெளியிட்ட ஹிப் ஹாப் தமிழா இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகே திரைப்படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என்று வலம் வரும் ஆதி தற்போது கொரோனா ஊரடங்கில் ‘நான் ஒரு ஏலியன்’ என்ற புதிய இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ ஏற்கனவே எனது ஹிப் ஹாப் தமிழா இசை ஆல்பத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது கொரோனா ஊரடங்கில் ஹிப் ஹாப் இசைக்கு ஏலியனாக நான் திரும்புவதை பிரதிபலிப்பது போன்று ‘நான் ஒரு ஏலியன்’ இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் 6 பாடல்களை நானே எழுதி பாடி இசையமைத்து இருக்கிறேன். சுதந்திர தினத்தில் வெளியாகும். என்னை 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும். மீண்டும் படம் இயக்குவேன். மீசையை முறுக்கு படம்போல் புதிய படமொன்றை இயக்க கதை எழுதி வருகிறேன்” என்றார்.

Next Story